இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, புத்தாண்டை வரவேற்ற மக்கள் முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வரை விவரிக்கிறது.
2025க்கு விடைகொடுத்து 2026ஐ ஆடி பாடி வரவேற்ற இளைஞர் பட்டாளம்... புத்தாண்டு மகிழ்ச்சியாக அமையும் என நம்பிக்கை..
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை...
பரபரப்பான அரசியலுக்கு சூழலில், வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா... தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டம்...
ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்... இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்
தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிமுக மாவட்டச் செயலர்களுக்கு பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு... எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தல்....
தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி உச்சகட்ட குழப்பத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை கருத்து...
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தரப்பினரிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு...
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம்..
ஒரே வாகனத்தில் இருந்து இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி இந்தியா சாதனை... ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளைத் தாக்க முடியும் என்றும் டிஆர்டிஓ அறிவிப்பு...
ஒரு லட்சத்துக்கும் கீழ் வந்தது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரே நாளில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 840க்கு விற்பனை