இன்றைய தலைப்புச் செய்தியானது ரஷ்ய அதிபர் புதினின் வருகை முதல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்...
தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் இன்று ராமதாஸ் தரப்பு பாமகவினர் போராட்டம்... தமிழ்நாட்டில் மழை என்பதால், டெல்லிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக அன்புமணி தரப்பு விமர்சனம்...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்... இருநாட்டு நல்லுறவு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்...
சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி... மக்களவையில் மத்திய கலால் வரி திருத்த மசோதா நிறைவேற்றம்..
புதிய ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு... கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவு வாபஸ்.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க இந்திய ரயில்வே நடவடிக்கை... கவுன்டர்களில் பயணிகளின் செல்போனுக்கு வரும் OTPஐ வைத்து சரிபார்த்த பின்னரே டிக்கெட் உறுதி செய்யப்படும்...
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக 7 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில், பாஜக 7 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 3வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சத்தீஸ்கரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை... பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழப்பு, 2 பேர் காயங்களுடன் மீட்பு..
இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்குத் தொடர்புடைய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, கெய்க்வாட் சதம்... அபாரமாக விளையாடி 359 ரன்கள் என்ற இலக்கை எட்டியது தென் ஆப்பிரிக்கா....