டிசம்பர் 3 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES | மெய்தி - குக்கி இன வீரர்கள் இணைந்து படைத்த வரலாறு TO 2வது ODI போட்டியில் INDvsSA மோதல்!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வலுவிழந்த டிட்வா புயல் முதல் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரை விவரிக்கிறது.

PT WEB

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றம்... அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணதிர முழங்கி, திரளான பக்தர்கள் வழிபாடு...

அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில், இன்று மாலை ஏற்றப்படுகிறது மகாதீபம்...லட்சக்கணக்கான பக்தர்கள்மகாதீபத்தை காண குவிந்து வருவதால்,திருவண்ணாமலை நகரமேகோலாகலம்...

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பிரத்யேக கொப்பரையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்... திருத்தணி, பழனி முருகன் கோயில்களிலும் பரணி தீபம் ஏற்றம்; திரளான பக்தர்கள் வழிபாடு...

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் கோலாகலம்... கிரீடம் சூட்டப்பட்டு, கையில் செங்கோல் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி...

திருவண்ணாமலை மகா தீபம்

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் சபரிமலை கோயில்... கொட்டும் மழையிலும் இரு முடியோடு, நனைந்தவாறே ஐயப்பனை தரிசித்த பக்தர்கள்...

நெல்லையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித சவேரியார் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கோலாகலம்... மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக நடந்த சப்பர பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு....

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்... ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை...

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு... காரைக்காலில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்பு...

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு... தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு...

கனமழை எச்சரிக்கை

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த சென்னை ஓட்டேரியில் தொடர்கனமழையால் பழமையானகட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து விபத்து... அருகே பிரியாணி கடையில்வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மூன்றுபேர் படுகாயம்...ஒத்திவைப்பு... தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு...

வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

திருவாரூரில் இரண்டு மணி நேரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவு... சம்பா பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை...

கனமழையால் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீரில் மூழ்கிய 20ஆயிரம் ஏக்கர் பயிர்கள்.. சிதம்பரம் அருகே பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை...

கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு... அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி...

இலங்கையில் பெருமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்வு... பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மீட்புப் பணிகள்...

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் ஆயிரத்து 300 பேர் உயிரிழப்பு... 800 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்...

எஸ்ஐஆர் விவகாரத்தில் 2ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்... மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு...

டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் குறித்து விவாதம்... மக்களவை தலைவர் ஓம்பிர்லா தலைமையில் விவாதம் நடைபெறும் என அறிவிப்பு...

மக்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயங்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு... விவாதத்திற்கு தயார், ஆனால் எதிர்க்கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்...

4ஆவது காசி தமிழ்ச் சங்கமத்தை தொடங்கிவைத்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்... மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு...

தினத்தந்தி நாளிதழ் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... தண்டையார்பேட்டையில் 39 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பு கட்டடமும் திறப்பு...

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள்... சேலம் இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்...

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்... பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்...

அன்புமணி - ராமதாஸ்.png

பாஜகவினர் தன்னிடம் நட்பு ரீதியாக பேசுகிறார்கள்; கூட்டணிக்கு வருமாறு அழைக்கவில்லை என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பேட்டி... கூட்டணியை விட்டு வெளியேறியவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி...

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு... போலி ஆவணங்களை ஏற்று கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்தது தவறு என மனு...

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் சாலைவலத்துக்கு அனுமதி மறுப்பு... பொதுக்கூட்டம் மட்டுமே நடத்திக்கொள்ளலாம் என காவல் துறை உத்தரவு...

சென்னையில் ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தது... சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 96ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை...

ஐரோப்பிய நாடுகள் போர் புரிய விரும்பினால், ரஷ்யா எப்போதும் தயாராக இருக்கும் என அதிபர் புதின் எச்சரிக்கை... உக்ரைன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு...

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக மெய்தி-குக்கி இன மோதல் இருந்துவரும் நிலையில், இரு சமூக வீரர்களும் இணைந்து இந்திய U17 கால்பந்து அணியை ஆசியக் கோப்பைக்கு தகுதி பெறச் செய்துள்ளனர்.

ஈரானுக்கு எதிரான போட்டியில் மெய்தி இன வீரர் ஒரு கோலும், குக்கி இன வீரர் மற்றொரு கோலும் அடிக்க 2-1 என வென்ற இந்தியா யு17 கால்பந்து ஆசியக்கோப்பைக்கு தகுதிப்பெற்று அசத்தியது.. இந்த வெற்றி, மாநில மக்களுக்கு பெருமையும், அமைதிக்கான நம்பிக்கையும் அளித்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி... சுவிட்சர்லாந்து அணியை 5 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா இன்று மோதுகிறது.. சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடமிருந்து மற்றொரு சதம் வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்..