வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்... 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு...
தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் அதிகாலை வேளையில் உறைபனி நிலவும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
ஜனவரி 20ஆம் தேதி ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு... அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை வாசித்து பேரவையின் மாண்பை ஆளுநர் காப்பாற்றுவார் என அப்பாவு நம்பிக்கை...
கள்ளக்குறிச்சியை தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று கள ஆய்வில் ஈடுபடும் முதல்வர் மு.க. ஸ்டாலின்... வேளாண் கண்காட்சியை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்...
தமிழகத்தில் மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் பாஜகவின் கண்களை உறுத்துகிறது... வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்...
எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்... அதிமுக ஆட்சியில் 5 விழுக்காடாவது நடந்ததா என்றும் கேள்வி...
அதிமுகவில் விருப்பமனு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு... டிசம்பர் 23ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் 31ஆம்தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு..
பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுக மட்டும் கோடி கோடியாக கொள்ளை அடிக்கவில்லையா?... அதிமுக-பாஜக கூட்டணி குறித்த முதல்வரின் விமர்சனத்துக்கு நயினார் நாகேந்திரன் பதில்...
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேருமாறு எங்களிடம் அண்ணாமலை பேசிவருகிறார்... மிரட்டி யாரையும் கூட்டணியில் சேர்க்க முடியாது என டி.டி.வி.தினகரன் பேட்டி...
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம்.... சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறை...
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் அறிவிப்பு...
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையெனில் அதனை ஒப்புக்கொள்ளுங்கள் என பதிவு...
பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி தரப்பு அறிவிப்பு... கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக்கூறி நடவடிக்கை...
தம்மை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது என ஜி.கே.மணி பேட்டி... கட்சியில் இருந்து அன்புமணி தம்மை நீக்குவது ஆச்சரியமாக இருப்பதாகவும் பதில்...
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை... வரும் 29ஆம் தேதி டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன்...
சிவகார்த்திகேயனின் பராசக்தி பட கதை திருடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு... விசாரணை நடத்தி ஜனவரி 2இல்அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்தியதிரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்குஉத்தரவு...
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு... தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை... திருவிதாங்கூர் மகாராஜா வழங்கியதங்க அங்கி அணிவிக்கப்பட்டஐயப்பனை மனமுருகி தரிசித்தபக்தர்கள்...
தொடர்ந்து 3ஆவது நாளாக ஏறுமுகத்தில் தங்கம் விலை... வரலாற்றில் இல்லாத அளவாக மீண்டும் புதிய உச்சம் தொட்டது வெள்ளி விலை...
முடிவுக்கு வருகிறதா, 2 ஆண்டுகளாக நீடித்த ரஷ்யா உக்ரைன் மோதல்... போர் நிறுத்தம் குறித்து இறுதிக்கட்டமுடிவை எடுக்க ட்ரம்பை நாளைசந்திக்கவிருக்கும் ஜெலன்ஸ்கி...
சிரியாவில் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு... 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதி...
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலே 20 விக்கெட்டுகள் சரிவு... ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி சொற்ப ரன்களை குவித்து திணறல்...
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல்... 3ஆவது போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு உதவிய ஷபாலி வர்மா...
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் வரலாறு படைத்தார். 77 வெற்றிகளுடன் முதலிடத்திலிருந்த ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங்கை பின்னுக்குதள்ளி சாதனை.
மலேசியாவில் இன்று நடக்கிறது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா... அரசியல் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வம்...
ஜனநாயகன் படத்தின் 3ஆவது பாடல் வெளியீடு... விஜய் பாடியுள்ள ‘செல்ல மகளே’ பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு...