நாடு முழுவதும் உயர்த்தப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் அமல்... புதிய கட்டண திருத்தத்திற்கு பயணிகள் இடையே கடும் அதிருப்தி...
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் அதிகாலை வேளையில் உறைபனி நிலவும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
டெல்லி, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்க முயற்சி... கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை சேதப்படுத்தி, கிறிஸ்தவர்கள் மீது வலதுசாரி அமைப்பினர் தாக்குதல்...
பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு 74 விழுக்காடு அதிகரிப்பு... கலவர கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது, அனைவரது பொறுப்பு என முதல்வர் ஸ்டாலின் கருத்து...
கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காங்கிரஸ், மதிமுக, தவெக தலைவர்கள் கண்டனம்... விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டது யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்...
இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்போர் உரிமம் பெற வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு... பாதுகாப்பாகவும், தரமான பொருட்களைக் கொண்டும் இடியாப்பம் தயாரிக்க அறிவுறுத்தல்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்... பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்...
திமுகவை தொடர்ந்து அதிமுகவும், சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு... முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இடம்பெற்றனர்...
சென்னையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்திப்பு... விஜயகாந்த் குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்கியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை எனவும் பேட்டி...
எஸ்ஐஆர் பணிகளில் ஒவ்வொன்றாக வெளியாகும் குளறுபடி... சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி...
தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்... நேரில் வந்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ்...
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு... கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தல்...
விடுமுறை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்... குடும்பத்தினருடன் பொழுதை கழித்து உற்சாகம்...
திருப்பதியில் தரிசன டோக்கன் பெற குவிந்த பக்தர்கள்... முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு...
அனைவரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு விரைவில் நனவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை... பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் அரசுத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தல்...
ஏசு கிறிஸ்து பிறந்த ஊரான பெத்லகேமில் 2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... காசா போரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு திருப்பலியில் பாலஸ்தீனியர்கள் உள்ளிட்டோர்பங்கேற்று பிரார்த்தனை...
போருக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் மக்கள்... பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் சென்று பாடல்களை பாடி உற்சாகம்...
வங்கதேசத்திற்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய BNP கட்சித் தற்காலிக தலைவர் தாரிக் ரகுமான்... பிரதமராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் ஏராளமானோர் வரவேற்பு...
தொடர் மழை, வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம்... வீடுகள், குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனை... சென்னையில் ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 2ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை...
வரலாற்றில் இல்லாத அளவாக மீண்டும் புதிய உச்சம் தொட்டது வெள்ளி விலை... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாயாக அதிகரிப்பு...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்... மெல்போர்னில் நடக்கும் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்...