இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு முதல் யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்தியா வரை விவரிக்கிறது.
நாடு முழுவதும் உயர்த்தப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணம் வரும் 26ஆம் தேதி முதல் அமலாகும் என அறிவிப்பு... ஒரே ஆண்டில் இரு முறை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி...
ரயில் கட்டண உயர்வு மூலம் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்... 500 கிலோ மீட்டர் பயணத்திற்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கம்...
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் திமுகவினர் விரைந்து செயல்பட வேண்டும்... திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...
இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடி அலையும் சிலருக்கு தமிழரின் நாகரிகம் தெரிவதில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்... ஈராயிரம் ஆண்டுகால சண்டையில் நாம் தோற்றுவிட மாட்டோம் எனவும் பேச்சு...
சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் சூழ்ச்சி வெல்லாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை... அதிமுக கூட்டணி மதநல்லிணக்கத்திற்கு எதிரானது எனவும் விமர்சனம்...
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து விவசாய சங்கத்தினர் நன்றி... காவிரி உபரிநீர் 100 ஏரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியதாக பாராட்டு...
மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் விழா... க்யூ ஆர் கோடு நுழைவுச்சீட்டுவைத்திருப்பவர்களுக்கு மட்டுமேஅனுமதி என அறிவிப்பு..
கிறிஸ்துமஸை முன்னிட்டு 23ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... சென்னையிலிருந்து கூடுதலாக 891 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு...
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்... மலையில் தீபம் ஏற்றுவோம் எனக் கூறி, இந்து அமைப்பினர் திரண்டதால் நீடித்த பரபரப்பு...
மீண்டும் புதிய உச்சம் தொட்டது முட்டை கொள்முதல் விலை... 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம்...
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தகவல்... கிறிஸ்துமஸ் தினத்தன்று காவிரிப் படுகை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடுமெனவும் கணிப்பு...
சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என வானிலை மையம் தகவல்... வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும் எனவும் கணிப்பு...
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிலவும்... தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம்... காற்று மாசும் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
மணாலி, சிம்லா, குலு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்கும் மக்கள்... டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் காற்று மாசில் இருந்து தப்பிக்க பயணம்...
காந்தியடிகள் பெயரிலான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றும் சர்ச்சைக்குரிய மசோதா... நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்...
காங்கிரஸ் ஆட்சியில் உருவான பிரச்சினைகளை பாஜக அரசு சரிசெய்து வருகிறது... அசாம் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு...
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தியடிகள் பெயர் நீக்கப்பட்டது அவரை மீண்டும் கொல்வதற்கு சமம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு...
வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை விளக்கம்... இந்தியா குறித்து வங்கதேச ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்படுவதாகவும் குற்றச்சாட்டு...
வங்கதேசத்தில் அதிகரிக்கும் பதற்ற சூழல்... சிட்டகாங்கில் உள்ள விசா சேவைமையத்தை கால வரம்பின்றி மூடியதுஇந்தியா...
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி... 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது பாகிஸ்தான்...
ஆஷஸ் கோப்பையை தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தக்கவைத்தது ஆஸ்திரேலியா அணி... அடிலெய்டில் நடந்த 3ஆவது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி...
அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில்லை... தனக்கு அரசியல் தெரியாது என்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பேட்டி..
தமிழ்நாட்டை தொடர்ந்து மலேசியாவிலும் விஜய் கூட்டத்திற்கு கட்டுப்பாடு... 27ஆம் தேதி நடக்கும் ஜனநாயகன் இசை வெளியீடு தொடர்பாக மலேசியா போலீஸார் அறிவுறுத்தல்...