காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தண்ணீரை சேமிக்க 5 தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதி.
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாள் நீட்டிக்க கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு. நள்ளிரவில் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நாட்டின் 73வது சுதந்தர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பருவமழை பாதிப்புகளால் நாடெங்கும் ஏற்பட்ட உயிரிழப்புகள் 225 ஆக அதிகரிப்பு. கேரளாவில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி என ஆளுநர் குற்றச்சாட்டு. நிலவரத்தை நேரில் பார்க்குமாறு அழைத்த ஆளுநர் தற்போது பின்வாங்குவதாக காங்கிரஸ் விமர்சனம்.
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு. கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என்றும் கருத்து.