இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

சாலை திட்டங்களுக்காக மக்கள் மனம் உவந்து நிலம் அளிக்க முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்

தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வடக்கு தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்

புரோ கபடி லீக் தொடரில், தனது முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது