கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தலைத் துண்டிக்கப்பட்டு மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
லாட்வியா நாட்டை சேர்ந்தவர் லிகா. இவர் தனது கணவர் மற்றும் சகோதரியுடன் மன அழுத்த சிகிச்சை பெறுவதற்காக கேரள மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வந்துள்ளார். இதனிடையே மார்ச் மாதம் 14ம் தேதி தனது கணவர் மற்றும் சகோதரியிடம் சொல்லாமல் கோவலம் கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து லிகாவின் கணவர் மற்றும் சகோதரி அவரை பல இடங்களில் தேடியிருக்கின்றனர். எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மரம் ஒன்றில் தலைத் துண்டிக்கப்பட்டு தலைகீழாக தொடங்கவிடப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது லிகாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லிகாவின் சகோதரி, சடலமாக மீட்கப்பட்ட உடலை பார்த்ததும் அது தனது சகோதரியின் உடல்தான் என தெரிவித்திருக்கிறார். ஆனால் போலீசார் டிஎன்ஏ சோதனை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிந்தபின் அனைத்தும் தெரியவரும் என தெரிவித்திருக்கின்றனர். தடயவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது.