தனக்கு 74 வயது ஆவதால் தயவு செய்து தன்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என ப.சிதம்பரம் தரப்பு வாதிட்டுள்ளது.
ப. சிதம்பரம் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிதம்பரம் தரப்பு, தனக்கு 74 வயதுஆவதால் தயவு செய்து தன்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என வாதிட்டது.
சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபில், தன்வாதத்தில் ''அமலாக்கத்துறை வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை 3 நாட்கள் வீட்டுக் காவலில் அனுப்புங்கள், அதற்கு தயாராக இருக்கிறோம்; ஆனால் திகார் சிறைக்கு மட்டும் அனுப்பிவிடாதீர்கள். 3 நாட்களில் உலகம் தலைகீழாகத் திரும்பி விடப்போவதில்லை'' என வாதிட்டார். வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.