கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.
இந்நிலையில் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.