இந்தியா

மூன்று பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா

மூன்று பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா

webteam

ராணுவத்தில் வீர, தீர செயல் புரிந்தோருக்கான உயரிய விருதுகளில் ஒன்றான அசோக் சக்ரா விருது அசாமைச் சேர்ந்த ஹவில்தார் ஹங்பான் தாதாவிற்கு, மறைவிற்குப் பிறகு வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், ஹங்பான் தாதாவின் மனைவி சேஷன் லோவங்கிடம் அசோக் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் கடந்த ஆண்டு மே 27ம் தேதி நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ஹவில்தார் ஹங்பான் தாதா, வீரமரணம் அடைந்தார். கர்னல் கபில்தேவ், கர்னல் ஹர்பிரீத் சாந்து ஆகியோருக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.