இந்தியா

‘எங்களுக்கு சாதி, மதம் வேண்டாம்’: 1.24 லட்சம் மாணவர்கள் சபதம்

‘எங்களுக்கு சாதி, மதம் வேண்டாம்’: 1.24 லட்சம் மாணவர்கள் சபதம்

rajakannan

கேரளாவில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 1.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கையின் போது சாதி, மதம் இரண்டும் இல்லை என்று அறிவித்துள்ளனர். 

கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அம்மாநில சட்டசபையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 1,23,630 பேரும், 11வது மற்றும் 12வது வகுப்புகளில் முறையே 278 மற்றும் 239 மாணவர்களும் அதில் இடம்பெற்றுள்ளனர். 

கேரளாவில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, தாங்கள் எந்தச் சாதி, மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை, அதாவது சாதி, மதமற்றவர்கள் என்று குறிப்பிடுவோரின் எண்ணிக்கை ஓவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சேர்க்கை படிவத்தில் சாதி, மதம் ஆகியவற்றிற்கான இடங்கள் நிரப்பாமல் இருக்கும். கேரளா முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகளில் இருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.