இந்தியா

தேச துரோக வழக்குகள் - ஹரியானாவில் அதிகளவு பதிவானது

தேச துரோக வழக்குகள் - ஹரியானாவில் அதிகளவு பதிவானது

webteam

நாட்டில் கடந்த ஆண்டில் 35 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் ஹரியானாவில் தான் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம், "நாட்டில் கடந்த ஆண்டு மட்டும், 35 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஹரியானாவில் 12, உத்தர பிரதேசத்தில் ஆறு, கர்நாடகா, கேரளாவில், தலா மூன்று, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, டெல்லியில், தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன".

கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்ற அணிகளை ஆதரித்தவர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்குகள் பற்றிய விபரங்களை, பராமரிப்பதில்லை என தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருபவர் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.