இந்தியா

ஹரியானாவில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு

Veeramani

ஹரியானா மாநிலத்தில் ஜூன் 7 வரை கோவிட் -19 ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின்போது ஒற்றைப்படை முறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயங்கலாம் என்றும் , ஆனால் கடைக்காரர்கள் ஒற்றைப்படை அடிப்படையில் கடைகளை திறக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கல்வி நிறுவனங்களும் ஜூன் 15 வரை மூடப்படும் என்றும், இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் என்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்தார்.

ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,132 ஆக உயர்ந்தது. புதிதாக 1,868 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மொத்த தொற்று எண்ணிக்கை 7,53,937 ஆக உயர்த்துள்ளது. ஹரியானாவில் மே 3ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.