அரியானாவில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையைத் தடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஒப்புக் கொண்டுள்ளார்.
ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் பஞ்சகுலா நகரில் குவிவதைத் தடுக்கத் தவறி விட்டதாக, அரியானா அரசு மீது எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கட்டார், நிலைமையைக் கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.