பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவின்படி தவறான தகவல் அளிப்பது மூலமோ, கட்டாயப்படுத்தியோ, செல்வாக்கை பயன்படுத்தியோ, கவர்ச்சியான வாக்குறுதிகள் மூலமோ மதமாற்றம் செய்வது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, திருமணத்திற்காக மதம் மாற்றுவதும் குற்றமாகும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களை மதம் மாற்றுவோருக்கு அதிக தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபரே தாம் குற்றமற்றவர் என நிருபிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் ஹரியானா சட்டமன்றத்தில் தக்கல் செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க: வலுக்கும் ஹிஜாப் பிரச்னை... தமிழகத் தலைவர்களின் கண்டனக் குரல்! #PTDigitalExclusive