இந்தியா

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது!

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது!

webteam

புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு பிரச்னை தொடர்பாக புகார் கொடுக்க குர்கான் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தார். அப்போது புகாரைப் பெற்ற அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணுக்கு பழக்கமானார். பழக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை, இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தார். 

(புஷ்பா)

பின்னர் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நேற்று கொடுத்த புகாரை அடுத்து போலீசார், விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 
இத்தகவலை மூத்த போலீஸ் அதிகாரி புஷ்பா தெரிவித்துள்ளார்.