இந்தியா

'கடும் குளிர், உடல்நல பாதிப்பு' - எல்லையில் உள்ள வீரர்களில் 90% பேரை மாற்றிய சீனா

JustinDurai

இந்திய எல்லையோரம் நிறுத்தியிருந்த வீரர்களில் 90 சதவிகிதம் பேரை சுழற்சி முறையில் மாற்றிவிட்டு புதிய வீரர்களை சீனா களமிறக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு அத்துமீறிய சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட சண்டையில் இருதரப்பிலும் உயர்ச்சேதம் நிகழ்ந்தது. இதையடுத்து பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்பிலும் படைகளை வாபஸ் பெற முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் சுமார் 50,000 வீரர்களை எல்லையோரம் நிறுத்தியிருந்த சீனா, அவர்களில் 90 சதவிகிதம் பேரை சுழற்சி முறையில் மாற்றிவிட்டு புதிய வீரர்களை படையில் சேர்த்துள்ளது.

கடந்த காலங்களில் இந்த எண்ணிக்கையானது 50%க்கு மேல் இருந்ததில்லை என கூறப்படுகிறது. கடுமையான குளிர் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாகவே வீரர்களை சுழற்சி முறையில் சீனா மாற்றியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.