உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் குழுவின் தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி இருந்து வருகிறார். இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு நாளை மறுநாள் நடக்க உள்ளது, அன்றைய தினமே ஹர்ஷ வர்தன் பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் தேர்வு குறித்து கடந்த வருடம் மே மாதம் முடிவு செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற முடிவின்படியே ஹர்ஷ வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வாரிய தலைவர் தேர்வானது வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.