இந்தியா

ஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

ஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

webteam

ஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, வரும் 24ம் தேதி, இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஹரியானாவை பொறுத்தவரை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பாஜக 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதியிலும் மற்றவை 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. இதேபோல், சிஎன்என் தொலைக்காட்சி, பாஜக 75 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. 

நியூஸ் எக்ஸ், பாஜக 75 லிருந்து 80 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் 9 லிருந்து 12 வரையிலும் மற்றவை 1 லிருந்து 4 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் பாஜக வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 

கருத்துக் கணிப்பு விவரம் : 

பாஜக : 32-44

காங்கிரஸ் : 30-42

ஜனநாயக ஜனதா கட்சி : 6-10

மற்றவை : 6-10