இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறக்க இருந்த காரணத்தினால் கோலி ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
“நாங்கள் இருவரும் மெய்சிலிர்ந்து இந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறோம். இன்று மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. உங்களது அன்பு, ஆசீர்வாதம், வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளும் நன்றி. எனது மனைவி அனுஷ்காவும், குழந்தையும் நலமாக உள்ளனர். மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம். இந்த நேரத்தில் எங்களது பிரைவஸிக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்” என கோலி தெரிவித்துள்ளார்.