இந்தியா

தேர்வுக்கு தயாராகிறார் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன்!

webteam

கேரளாவில் விபத்துக்குள்ளான, மீன் விற்று படித்து வரும் ஹனன் ஹமீதின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று அம்மாநில அமைச்சர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்ப னை செய்து வந்தார். இவர் பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித் தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில், சிறப்பு விருந் தினராகவும் அவர் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த 3 ஆம் தேதி பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந் து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயம் குணமாகாததால் ஹனன் நடிக்க வேண்டிய படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட் டுள்ளது. 

இதுபற்றி ஹனன், ‘இப்போது என் கால்களையும் கைகளையும் அசைக்க முடிகிறது. ஆனால் காயம் இன்னும் ஆற வேண்டியிருக்கிறது. குணமடைந்து வருகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் கேரள அமைச்சர் ஏ.சி.மொய்தீன் மருத்துவமனைக்குச் சென்று நேற்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவரது மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கும் என்று தெரிவித்தார். 

இதையடுத்து ஹனன் கூறும்போது, ‘தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டது. தேர்வுக்கு தயாராகி வருகிறேன்’ என் றார். இதற்காக மருத்துவமனையிலேயே அவர் படித்துவருகிறார். ஆறு வார ஓய்வுக்குப் பிறகு ஹனன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்ட ர்கள் தெரிவித்துள்ளனர்.