பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் பகுதியில் கடந்த 5ஆம் தேதி ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா இயக்கங்களின் முக்கிய தளபதிகளுடன் ஈரானிலுள்ள ஹமாஸ் பிரதிநிதி காலித் அல் காதுமி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
’காஷ்மீர் ஒற்றுமையும் ஹமாஸ் செயல்பாடுகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவிற்கு எதிராகவும் இந்திய பகுதி காஷ்மீரை மீட்க உறுதி ஏற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பைக் பேரணியில் பங்கேற்ற பயங்கரவாத அமைப்பினர் ஹமாஸ் கொடியுடன் சென்றனர். காசாவில் இருந்தவாறு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்த கிளர்ச்சிக்குழுவான ஹமாஸ் தற்போது காஷ்மீர் பகுதிக்கு வந்துள்ளது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஹமாசும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையிலும் காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று ட்ரம்ப் பேசியுள்ள நிலையிலும் ஹமாஸ் அமைப்பின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.