இந்தியா

"அண்டை தேசத்தவருக்கு குடியுரிமை அளித்தால்...":மத்திய அமைச்சர் கருத்து

"அண்டை தேசத்தவருக்கு குடியுரிமை அளித்தால்...":மத்திய அமைச்சர் கருத்து

jagadeesh

அண்டை நாட்டிலிருந்து வரும் மக்கள் அனைவருக்கும் இந்திய குடிமகன் அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்தால் வங்கதேசத்தில் உள்ள பாதி பேர் நம் நாட்டுக்கு வந்துவிடுவார்கள் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி, சந்திரசேகர ராவ் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று குடிமகன் அந்தஸ்து அளித்தால் வங்கதேசத்தில் உள்ள பாதி பேர் இந்தியாவுக்குள் வருவார்கள் என்றும் அதற்கு ராகுல்காந்தியும் சந்திரசேகர் ராவும் பொறுப்பேற்பார்களா என்றும் கிஷண் ரெட்டி கேள்வி எழுப்பினார்.