இந்தியா

4 ஆயிரம் பேரை அப்புறப்படுத்தும் முயற்சி... தீவிரமாகும் உத்தராகண்ட் போராட்டம்

webteam

யில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தகாக கூறி 4000 குடும்பங்களை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிராக உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் நைனிதல் மாவட்டம் ஹால்த்வானி நகரில் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 27 ஏக்கர் ரயில்வே நிலத்தில் வாழும் 4,365 குடும்பங்களை சேர்ந்த தோராயமாக 50 ஆயிரம் பேரை காலி செய்ய உத்திராகண்ட் உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் 3 அரசு பள்ளிகளும் அடங்கும்.

உத்தராகண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹால்த்வானி நகரில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். பல ஆண்டுகளாக வசிக்கும் எங்கள் வீடுகளை நீதிமன்றம் காப்பாற்றி தரவேண்டும் என கூறி கோஷம் எழுப்பி வருகின்றனர்.