ராகுலை சந்தித்தார் பாரக் ஒபாமா
ராகுல் காந்தியை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசினார்.
ஒபாமா பவுண்டேஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் அறக்கட்டளை நிகழ்ச்சி விழாவில் பங்கு கொள்வதற்காக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டெல்லி வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்து விட்டு ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை பாரக் ஒபாமா பேசியுள்ளார். அது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் ஒரு பயனுள்ள உரையாடலில் தான் மீண்டும் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.