இந்தியா

ரிசர்வ் வங்கியில் குருமூர்த்திக்கு முக்கிய பொறுப்பு

ரிசர்வ் வங்கியில் குருமூர்த்திக்கு முக்கிய பொறுப்பு

Rasus

துக்ளக் இதழின் ஆசிரியரான குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துக்ளக் இதழின் ஆசிரியராக இருந்த சோ கடந்த 2016-ஆம் ஆண்டு மறைந்தார். சோ மறைவிற்கு பிறகு துக்ளக் இதழை ஆடிட்டர் குருமூர்த்தி கவனித்து வருகிறார் . இந்நிலையில் குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு இவரது நியமனத்தை உறுதி செய்துள்ளது. 4 வருடத்திற்கு இவர் இப்பதவியில் நீடிப்பார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, “ முதல்முறையாக இயக்குநராக பொறுப்பேற்கிறேன். இதுவரை எந்த தனியார் மற்றும் பொதுத்துறையிலும் இயக்குநர் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டதில்லை. உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது இந்த பொறுப்பை ஏற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அப்போது அதனை ‘ஃபினான்சியல் பொக்ரான்” என விமர்சித்து இருந்தார் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.