இந்தியா

குர்மீத் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் விடுதிக்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதை!

குர்மீத் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் விடுதிக்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதை!

webteam

சர்ச்சை சாமியார் குர்மீத் ஆசிரத்தில் பெண் சீடர்கள் விடுதிக்கு செல்லும் சுரங்கப்பாதை, வெடிமருந்துகளை கொண்ட தொழிற்சாலை உள்ளிட்ட திடுக்கிடும் ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத், சமீபத்தில் பெண் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது ஆசிரமத்தில் அமலாக்கத்துறையினரும், தடவியல் அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இதில் பெருந்தொகை எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் தடவியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், குர்மீத் அறையில் இருந்து பெண் சீடர்கள் அறைக்கு செல்லும் ரகசிய சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் சீடர்களுடன் குர்மீத் உல்லாசமாக இருந்தார் என்று வெளிவந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அங்கு ஆபத்தான வெடிமருந்துளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் கண்டறிந்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்து அடைத்தனர்.