இந்தியா

இன்று காஷ்மீர் செல்கிறார் குலாம் நபி

இன்று காஷ்மீர் செல்கிறார் குலாம் நபி

webteam

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசிக்க, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஸ்ரீ‌நகர் செல்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீர் மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று ஸ்ரீநகர் செல்லவிருப்பதாகவும், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்போவதாகவும் குலாம் நபி கூறியுள்ளார்.