இந்தியா

இசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி 

webteam

குஜராத் மாநிலத்தின் பிரபல கிராமியப் பாடகியான கீதா ராபரி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, அவர் பாடிய ஆல்பத்தை பிரதமருக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலத்தின் பிரபல கிராமியப் பாடகி கீதா ராபரி. அவர் பாடிய ஆல்பம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்காக கீதா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி ஆண்டு விழாவில் கீதா ராபரி பங்கேற்ற போது சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றதாகவும், அதில் தனது பாடலை ரசித்த மோடி 250 ரூபாய் வழங்கி கவுரவித்ததாகவும் கீதா ராபரி தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் கீதா ராபரியை நான் ஊக்குவித்தது தனக்கு நினைவில் உள்ளது என்றும் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

கிராமியப் பாடகியான கீதா ராபரி ரோனா ஷெர்மா என்று தொடங்கும் குஜராத் மொழி ஆல்பத்தை 25 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.