ஆசியாவில் முதன்முறையாக கருப்பையைத் தானமாகப் பெற்ற பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுக்கவுள்ளார்.
குஜராத் மாநிலம் பருச் என்ற பகுதியைச் சேர்ந்த மீனாக்ஷி என்பவருக்கு உடல்ரீதியான சில பிரச்னைகள் காரணமாக கருப்பை நீக்கப்பட்டது. இதையடுத்து தனது தாயிடமிருந்து கருப்பையை அவர் தானமாகப் பெற்றார். இதைத்தொடர்ந்து மீனாக்ஷிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்ப்பமடைந்துள்ள மீனாக்ஷி, விரைவில் குழந்தையை பெற்றெடுக்க இருக்கிறார். இதன்மூலம் ஆசியாவிலேயே முதன்முறையாகவும், உலகத்தில் ஒன்பதாவது முறையாகவும் தானமாக பெற்றக் கருப்பையில் குழந்தை பெற்றெடுப்பவர் என்ற பெருமையை மீனாக்ஷி பெறுகிறார்.