இந்தியா

ஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

ஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

webteam

ஆவி தன்னை தாக்கிவிட்டதாகக்கூறி 5 குழந்தைகளுடன் கிணற்றில் தாய் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ராயல் கிராமத்தில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகள் 5 பேருடன் வசித்து வந்துள்ளார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வறுமையால் மன உளைச்சலில் இருந்துள்ளார் கீதா. மேலும் தான் கண்களை மூடிய நேரத்தில் ஆவி தன்னை தாக்கிவிட்டதாகவும் கூறி வந்துள்ளார். பல மன உளைச்சல்களால் தற்கொலைக்கு திட்டமிட்ட கீதா, பல வருடங்களுக்கு முன்பு தான் வேலை பார்த்த பாஞ்ச்பிப்லா என்ற கிராமத்தில் தோட்டக்கிணறை தற்கொலைக்காக தேர்வு செய்துள்ளார். தனது 5 குழந்தைகளுடன் அங்கு சென்ற கீதா, முதலில் குழந்தைகளை தூக்கி கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் அவரும் குதித்துள்ளார். இதனைக்கண்ட கிராமத்தினர் கீதாவையும், அவரின் மூத்த மகள் தர்மிஷ்தாவையும் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 4 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். 

தற்கொலை முடிவு குறித்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்த கீதா, “கடந்த 2 வருடங்களாக கடுமையான வறுமையில் சிக்கித்தவித்தேன். தான் கண்களை மூடிய நேரத்தில் ஆவி என்னை தாக்கிவிட்டது. அது என்னை தூங்கவும் விடாது. அதனால் நான் தற்கொலைக்கு திட்டமிட்டேன். நான் இல்லாமல் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என யோசித்தேன். அதனால் அவர்களையும் கொன்றுவிடலாம் என திட்டமிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கீதா குறித்து பேசிய அவரது கணவர் தர்ம்ஷி தனக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாக கீதா நம்பிவந்ததாகவும், எல்லா பிரச்னைகளிலும் இருந்தும் அவர் வெளிவர விரும்பினார் என்று  தெரிவித்தார்.