இந்தியா

ஹேக் செய்யப்பட்ட பல்கலைக்கழக இணையதளம் : கசிந்த மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள்!

ஹேக் செய்யப்பட்ட பல்கலைக்கழக இணையதளம் : கசிந்த மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள்!

JustinDurai

குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (ஜி.டி.யு)  இணையதளம் நேற்று வியாழக்கிழமை ஹேக் செய்யப்பட்டுள்ளது.  சுமார் 1,200 பொறியியல் மாணவர்களின் புகைப்படங்கள், பான் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையதளம் ஒன்றில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து ஜி.டி.யு நிர்வாகம், அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தது. சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக ஜி.டி.யு துணைவேந்தர் நவின் ஷெத் கூறுகையில், ‘’குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.இ. பயிலும் மாணவர்கள், தாங்கள் எழுதவிருக்கும் எட்டாவது செமஸ்டர் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் தான் இணையத்தில் கசிந்தது தெரியவந்துள்ளது. அந்த லிங்குகள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

ஆன்லைன் தேர்வுக்கு மொத்தம் 28,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் ஆனால் பதிவு செயல்முறை முடிந்த பிறகு 1,200 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் கோரிக்கையை நாங்கள் கருத்தில் கொண்டு, ஜூலை 28 அன்று மாலை அவர்களுக்கு ஒரு சோதனை ஓட்டத்தை நடத்தினோம். அப்போது நாங்கள் சோதனை செய்தபோது, மாணவர்களின் விபரங்கள் இணையதளம் ஒன்றில் கசிந்ததை நாங்கள் கண்டறிநபோலீசில் புகார் அளிக்கப்போவதாக நாங்கள் அறிவித்தபோது, விரைவில் அந்த இணைப்பு செயல்படுவது நின்றுபோனது.

கணினி ஹேக் செய்யப்பட்டதா என்று சரிபார்த்துள்ளோம்.  மேலும் ஹேக்கரும் விரைவில் அடையாளம் காணப்படுவார். கசிந்த தகவல்களில் வினாத்தாள்கள் போன்ற தேர்வு தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை” என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.