இந்தியா

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: அகமதாபாத் நகராட்சியில் 24 இடங்களில் வெற்றி - முன்னிலையில் பாஜக

EllusamyKarthik

குஜராத்தில் உள்ள ஆறு நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களையும் பாஜக கைப்பற்ற மும்முரம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸும் மல்லுக்கு நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியும் தங்கள் கணக்குகளை தொடங்க முயல்கின்றன. 

அகமதாபாத் நகராட்சியில் மட்டும் பாஜக 24 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆறு நகராட்சிகளில் உள்ள 576 சீட்களில் 40 சீட்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

சூரத்தில் ஆம் ஆத்மி 8 இடங்களையும், ஜாம்நகரில் பகுஜன் சமாஜ் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. வதோத்ராவில் 36 சீட்களில் 29 இடங்களை கைப்பற்றியுள்ளது பாஜக. வெற்றியை கொண்டாடும் வகையில் அந்தந்த அரசியல் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.