இந்தியா

ராகுல்காந்தி மீது குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

Veeramani

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹர்திக் படேல், கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மீது விமர்சனங்களை முன்வைத்தது சர்ச்சையாகியுள்ளது.

குஜராத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டங்களை முன்னெடுத்த இளம் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் தம்மை கட்சியில் இருந்து வெளியேற்ற திட்டமிடுவதாகவும், இது தொடர்பாக ராகுல்காந்தியிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.



ஹர்திக் படேலின் இந்த குற்றச்சாட்டு உள்கட்சியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இதனிடையே, ஹர்திக் படேலுக்கு ஆம் ஆத்மி கட்சி நேரடியாகவே அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்காக பாஜக -காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இடத்தைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ராஜ்கோட் கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜ்குரு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.