இந்தியா

வீடியோ கான்பரன்ஸ் விசாரணைதானே? அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்

Veeramani

குஜராத் உயர்நீதிமன்ற அமர்வின் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையின்போது காரில் அமர்ந்தபடி புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வின் ஜாமீன் விவகாரத்திற்கான வழக்கின், வீடியோ கான்பரன்ஸ் நடவடிக்கைகளில் கலந்துகொண்டபோது, தனது காரில் அமர்ந்தபடி புகைபிடித்தபடியே வாதாடிய வழக்கறிஞருக்கு ₹ 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, குஜராத் பார் கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் அசோசியேஷன்களில் உறுப்பினராக உள்ள  வக்கீல்கள், அவர்களின் குடியிருப்புகள் அல்லது அலுவலக இடங்களிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.