இந்தியா

ஓவர் போதை: துணை முதல்வர் மகனுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு

ஓவர் போதை: துணை முதல்வர் மகனுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு

webteam

குஜராத் மாநில துணை முதல்வரின் மகன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல். இவர் மகன் ஜெயிமின் பட்டேல். இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் கத்தார் செல்வதற்காக அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது பட்டேல் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார். அவரால் நடக்க கூட முடியவில்லை. தள்ளாடியபடியே வந்தார். பின் வீல்சேரில் அவரை வைத்து அழைத்து வந்தனர். அவரை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், அளவுக்கு அதிகமாக அவர் மது அருந்தியிருந்ததால் கத்தார் விமானத்தில் ஏற அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பட்டேல், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.