இந்தியா

பாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி  

பாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி  

webteam

குஜராத் மாநிலத்தில் மரம்நபர்கள் சிலர் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 

குஜராத் மாநிலம் கந்த்லா (Kandla) பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டல வளாகத்திற்குள் நுழைய சில மரம் நபர்கள் கடந்த 5ஆம் தேதி முயற்சி செய்துள்ளனர். அவர்களை உள்ளே அனுமதிப்பதற்கு முறையான அடையாள அட்டை இல்லாததால் அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், அந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு அதிகாரிகளை கம்பு, கத்தி உள்ளிட்டவற்றை வைத்து தாக்கும் மாதிரியான காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் சிலர் அவர்களை தாக்க துரத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.