இந்தியா

வேறு ஆணுடன் பழக்கம் : ‘ரவுடி’ காதலியை தாக்கிய ரவுடி ‘காதலன்’

வேறு ஆணுடன் பழக்கம் : ‘ரவுடி’ காதலியை தாக்கிய ரவுடி ‘காதலன்’

webteam

தனது உறவை முறித்து வேறொரு ஆணுடன் பழகிய முன்னாள் காதலியும் "லேடி டானாக" வலம் வரும் பெண்ணை இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த பெண் பூரி என்று அழைக்கப்படும் அஸ்மிடபா கோஹில் (22). இப்பெண் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக இருந்துள்ளார். இவருக்கு சஞ்சய் வெகிலா என்ற ரவுடி இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, பின் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வெகிலாவுடான உறவை கோஹில் முறித்துக்கொண்டுள்ளார். அத்துடன் தனது கூட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெகிலா கடந்த வியாழக்கிழமை அன்று கோஹிலை வேறு எந்த ஆணுடனும் பழகக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த கோஹில், வெர்ஷா சொசைட்டி பகுதியில் உள்ள ராகுலின் வீட்டில் தங்கியுள்ளார். இதையறிந்த வெகிலா, வெள்ளிக்கிழமை ராகுலின் வீட்டிற்கு இரும்பிலான உலோகத்துடன் சென்றுள்ளார். ராகுல் வீட்டின் கதவை இரும்பால் பலமுறை வெகிலா அடித்துள்ளார். அத்துடன் வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த கோஹிலின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.

பின்னர் சத்தம் கேட்டு வெளியே வந்த கோஹிலின் கன்னத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார். மேலும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கோஹில் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வெகிலாவை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது தான் தங்கியிருந்த இடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற வெகிலாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்த போலீஸ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.