இந்தியா

குஜராத்: ஆயிரக்கணக்கான பசுக்களை சாலையில் அவிழ்த்துவிட்டு நூதன போராட்டம்!

webteam

குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கான நிதி உதவி வழங்காத மாநில அரசைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவித் தொகை வழங்கப்படும் என அம்மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதவித்தொகை வழங்கப்படாததால், 200க்கும் அதிகமான பசுக்கள் காப்பகங்களைச் சேர்ந்த அறங்காவலர்கள், பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான பசுக்கள் சாலைகளில் ஓடியதால், வடக்கு குஜராத் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தங்களது கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றாவிடில் அரசு அலுவலக வளாகத்திற்குள் பசுக்களை திறந்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/AudTFd1OTFA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>