இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த மகன் - துயரத்திலும் ரூ.15 லட்சம் நிதியில் உதவி வரும் பெற்றோர்!

கொரோனாவால் உயிரிழந்த மகன் - துயரத்திலும் ரூ.15 லட்சம் நிதியில் உதவி வரும் பெற்றோர்!

jagadeesh

கொரோனா பாதிப்பால் கடந்தாண்டு மகனை இழந்த பெற்றோர் தங்கள் வங்கி வைப்பு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலவு செய்து வருகின்றனர்.

குஜராத் மாநில்ததை சேர்ந்தவர்கள் ரசிக் மேத்தா மற்றும் கல்பனா மேத்தா தம்பதியர். இந்தத் தம்பதியிரின் மகன் கடந்தாண்டு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த இழப்பு அவர்கள் வாழ்க்கையில் பேரிடியாக இருந்தது. ஆனாலும் இந்தாண்டு இந்தியாவில் கொரோனா நோய் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு முடிவை எடுத்தனர் இந்த தம்பதியினர்.

அதாவது தங்களது மகனின் எதிர்காலத்துக்காக வைப்பு நிதியில் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வங்கியில் இருந்து எடுத்துள்ளனர். மகனை இழந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும் இந்தத் தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.