இந்தியா

மரபணு பிரச்னையால் அவதிபட்ட மகன் - சிறப்பு ஊசிக்காக 16 கோடி நிதி திரட்டிய குஜராத் தம்பதி

மரபணு பிரச்னையால் அவதிபட்ட மகன் - சிறப்பு ஊசிக்காக 16 கோடி நிதி திரட்டிய குஜராத் தம்பதி

webteam

தனது மகனின் மரபணு பிரச்னைக்கான சிகிச்சைக்காக 16 கோடியை திரட்டியுள்ளனர். 

குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவரும் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களின் மகன் தைர்யராஜூக்கு முதுகு தண்டில் மரபணு சார்ந்த பிரச்னை இருப்பது, அவர் பிறந்த அடுத்த மாதத்தில் தான் தெரியவந்தது. இதனால் தைர்யராஜ்ஜால் கால் கைகளை நகர்த்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவரின் மூச்சும் விடும் திறனும் பாதிக்கப்பட்டது.

தனது மகனின் பிரச்னையை சரிசெய்ய நினைத்த அவரின் பெற்றோருக்கு இதற்கு ஒரு ஊசி இருக்கிறது என்பதும் இதனை சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட நோவார்டிஸ் என்ற மருந்து நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் அதன் விலை 16 கோடி என்பதும் தெரியவந்தது.

தற்போது 5 மாத மகனாக இருக்கும் தைர்யராஜ்ஜிற்காக அந்த ஊசியை வாங்க முடிவு செய்த அவர்கள் குஜராத் மட்டுமல்லாமது வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் பிரசாரம் செய்தனர். நன்கொடையாளர்களிடம் உதவி கோரினர். அதன் பலன் 42 நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த 16 கோடி கிடைத்து விட்டது.

உடனடியாக அமெரிக்காவில் இருந்து ஜோல்கென்ஸ்மா ஊசியை வரவழைத்தனர். அதன் இறக்குமதி விலை 6.5 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்து உதவியுள்ளது. இந்த நிலையில்  செவ்வாய்க்கிழமை மும்பையில் அனுமதிக்கப்பட்ட தைர்ராஜ்ஜிற்கு  ஊசி செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரே ஒரு முறை செலுத்தப்படும் ஊசியாகும்.