48 அடி 8 இன்ச் உயர மணல் அரண்மனை சிற்பத்தினை வடிவமைத்து ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் உலக சாதனை படைத்தார்.
பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் அரண்மனை சிற்பம் உலக அமைதியை வலியுறுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 45 அடி 10 இன்ச் உயரத்தில் மணல் அரண்மனை சிற்பம் உருவாக்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை சுதர்சன் பட்நாயக் முறியடித்தார். சுதர்சன் பட்நாயக்கின் சாதனை மணல் சிற்பத்தை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இந்திய பிரதிநிதி ஸ்வப்னில், சாதனையை அங்கீகரிப்பதற்கான சான்றிதழை அவரிடம் அளித்தார்.