எல்லா கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எல்லா கட்சிகளின் ஒப்புதலுடன் கூட்டு முடிவாக எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி அமலாக்கத்தில் அரசை இப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டார். ஜிஎஸ்டி நடைமுறையை சிறப்பானதாக்கத் தேவையான மாற்றங்களை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு போராடி வரும் நிலையில், அதுபற்றி அக்கறையின்றி காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, குஜராத் வெள்ளத்தில் தவித்தபோது தனது எம்எல்ஏக்களை பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி தங்க வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.