இந்தியா

ஜிஎஸ்டி வரியால் ஆகஸ்ட் மாதம் கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

rajakannan

ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசுக்கு ரூ.90,670 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த வரியில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி ரூ.14,402 கோடி, மாநில அரசின் வரி ரூ.21,067 கோடி மற்றும் மத்திய மாநில அரசின் வரி ரூ.47,377 கோடி ஆகும். மேலும் செஸ் வரியாக ரூ.7,823 கோடி வசூலாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை மாதத்தை விட ஆகஸ்டில் குறைவாகவே ஜிஎஸ்டி வரி கிடைத்ததுள்ளது. ஜூலை மாதம் ரூ.95,000 கோடி ஜிஎஸ்டி வரியாக கிடைத்தது. அதேபோல், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள 68.20 லட்சம் பேரில் இருந்து 37.63 லட்சம் பேர் மட்டும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்துள்ளனர்.