ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. திருத்தம் ஏதுமின்றி ஜி.எஸ்.டி தொடர்பான நான்கு மசோதாக்களும் நிறைவேறின.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவிற்கு ஏற்கனவே மக்களவையில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. தற்போது மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.
எனவே, இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததும், அது சட்டமாகும். இதைத் தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமலுக்கு வருகிறது.