டெல்லியில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கண்காணிப்பாளர் ஒருவர் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மோனிஷ் மல்கோத்ரா, இதற்கு முன்பு மத்திய கலால்வரித் துறையில் பணியாற்றியுள்ளார். அப்போது மனாஸ் பத்ரா என்ற வரி ஆலோசகர், இவருக்கு இடைத்தரகராக செயல்பட்டு, பலரிடம் லஞ்சம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் மல்கோத்ராவையும், மனாஸ் பத்ராவையும் கைது செய்துள்ளனர்.