இந்தியா

ஜிஎஸ்டியால் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்: ‌மத்திய அமைச்சர் தகவல்

ஜிஎஸ்டியால் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்: ‌மத்திய அமைச்சர் தகவல்

webteam

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் அடுத்த 3 மாதங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். 

ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் அடுத்த 3 மாதங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கணக்குப் பதிவு பிரிவில் மட்டும் உருவாகும். ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.