இந்தியா

ஜிஎஸ்டிக்கு எதிராக பிரபல நடிகர் உண்ணாவிரதம்: பிரகாஷ்ராஜ் நேரில் ஆதரவு

ஜிஎஸ்டிக்கு எதிராக பிரபல நடிகர் உண்ணாவிரதம்: பிரகாஷ்ராஜ் நேரில் ஆதரவு

webteam

கைவினைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறக்கோரி பெங்களூருவில் நாடக நடிகர் பிரசன்னா ஹெக்கோடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் தொடர்கிறது. 

பெங்களூருவில் பிரபல நாடக நடிகர் பிரசன்னா ஹெக்கோடு தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தப் போராட்டத்தின் வாயிலாக, கைவினைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரை, பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பிரச்னைகள் தொடர்பாகவே தான் கருத்து தெரிவித்து வருவதாகவும், எந்தக் கட்சியினரையும் குறிவைத்து விமர்சிக்கவில்லை என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். இதை திட்டமிட்டு திரித்து தன் மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுவதாகவும் அவர் குறை கூறினார்.